மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

விடுமுறை நாட்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது!

விடுமுறை நாட்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது!

பொது விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையில் புத்தாண்டு, பொங்கல், மாட்டுப் பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம், மொகரம், பக்ரீத், ரம்ஜான், புனித வெள்ளி, கிறிஸ்மஸ், தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மே தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு போன்றவை அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகின்றன.

அந்த உத்தரவு அனைத்து தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற அனைத்து தமிழ்நாடு அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனையகங்களுக்கு, மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கிறது.

கேரளாவில் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் தேதியன்று மது விற்பனை கிடையாது என்றும், பெரும்பாலான பண்டிகை தினங்களில் மது விற்பனை கிடையாது. டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து பண்டிகை நாட்களிலும் மது விற்பனை கிடையாது.

பண்டிகை காலங்களில் வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடவே விடுமுறை விடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பண்டிகை தினத்தில் மது அருந்தி நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. சந்தோசமாக இருக்க வேண்டிய இல்லம் துக்க வீடாக மாறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளித்து மது விற்பனை இல்லா நாட்களாக அறிவிக்க வேண்டும். குறிப்பாக ஜனவரி 14, 15, 16, 18 கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 12) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சட்டப்படிதான் விடுமுறை வரும். அரசு பொது விடுமுறை நாட்களில் கட்டுப்படாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பொதுநல வழக்குகள் இல்லாமல், வழக்காடிகளுக்காக எத்தனை வழக்கு தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பார் கவுன்சில் பதிவை ரத்து செய்யவும் உத்தரவிடுவோம் என்றும், விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 12 ஜன 2022