மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: கோவைக்காய் சிப்ஸ்!

ரிலாக்ஸ் டைம்: கோவைக்காய் சிப்ஸ்!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம் பல அலுவலகங்களில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமையலறையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த கோவைக்காய் சிப்ஸ் செய்து ரிலாக்ஸ் டைமில் புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

கால் கிலோ கோவைக்காய்களை நான்காக நீளவாக்கில் வெட்டவும். ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது), சூடான எண்ணெயில் உதிர்க்கவும். சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதாவிட்டால், கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறப்பு

இரும்புச்சத்து அதிகம் உள்ள கோவைக்காய் உடல் சோர்வை நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறனை அளிக்கும்.

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

புதன் 12 ஜன 2022