மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவை கிச்சடி

கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவை கிச்சடி

ஒவ்வொரு நாளும் ‘இன்று என்ன சமைப்பது...’ என்பதுதான் இல்லத்தரசிகள் மனத்தில் எழும் கேள்வி. எதையுமே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். இதோ உங்களது கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் ஒரு உணவு என்கிற வரிசையில் புதன்கிழமைக்கான சிறப்பு உணவு.

என்ன தேவை?

கோதுமை ரவை - 200 கிராம்

தோலுரித்த பச்சைப்பட்டாணி, பீன்ஸ் - தலா 100 கிராம்

சிறிய குடமிளகாய், கேரட் - தலா ஒன்று

பச்சை மிளகாய் - 2

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - சிறியது ஒன்று

கொத்தமல்லி - சிறிதளவு

வறுத்த முந்திரி - 10

எண்ணெய் - 100 மில்லி

நெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை ரவையை இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு வறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு நான்கு மடங்கு தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து நான்கு விசில்விட்டு இறக்கவும். பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். குடமிளகாயையும் பொடியாக நறுக்கவும். கேரட் தோல் சீவி பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பச்சைப்பட்டாணி, நறுக்கிய காய்களைச் சேர்த்து பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிப்போட்டு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேகவைத்த எடுத்த கோதுமை ரவையுடன் வதக்கிய காய்களைச் சேர்த்து நன்கு கலந்து நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். இதில் எலுமிச்சையைப் பிழிந்து, வறுத்த முந்திரி போட்டுக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்ச்சட்னி இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

நேற்றைய ரெசிப்பி: மேத்தி பனீர் சப்பாத்தி ரோல்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 12 ஜன 2022