மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

ஜனவரி 16இல் சிறப்பு பேருந்துகள் இயங்காது!

ஜனவரி 16இல் சிறப்பு பேருந்துகள் இயங்காது!

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

வருகிற ஜனவரி 14,15,16 ஆகிய 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதுபோன்று இந்தாண்டு கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதிவரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 75 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் வருகிற ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையன்று(ஜனவரி 16) பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும், அன்றைய தினத்தில் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு செலுத்திய முன்பதிவு கட்டணம் இரண்டு நாட்களில் திருப்பித் தரப்படும். பயணிகள் அதற்கு பதிலாக வேறொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் இயக்கப்படாததால், பொங்கல் முடிந்து பணிக்கு திரும்புவோர்கள் திங்கள்கிழமைதான் பயணிக்க முடியும். அதற்கு மறுநாளான செவ்வாய்கிழமைதான் வேலைக்கு செல்ல முடியும்.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

செவ்வாய் 11 ஜன 2022