மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

மின்சார ரயிலில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: பயணிகள் தவிப்பு!

மின்சார ரயிலில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: பயணிகள் தவிப்பு!

சென்னை மின்சார ரயில்களில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டினால் பல பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.

கொரோனா பரவலை தடுக்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடுகின்ற கோயில்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களுக்கு வருவோர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுபோன்று சென்னை மின்சார ரயிலில் பயணிப்பதற்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

நேற்று முதல் அனைத்து மின்சார ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் தடுப்பூசி செலுத்தாமல் ரயிலில் பயணிக்க வந்த 2,177 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சில இடங்களில் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்திய பயணிகளுக்கும் பயணச்சீட்டுகள் வழங்க மறுப்பு தெரிவித்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் பல பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். முகக்கவசம் அணியாமல் வந்த சுமார் 30 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

கட்டணம் குறைவு, ஈசியான பயணம் உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் பெரும்பாலான பயணிகள் மின்சார ரயிலை தேர்வு செய்து பயணிப்பார்கள். ஆனால், தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் பெரும்பாலான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையில் உள்ள கால இடைவெளியை கருத்தில்கொண்டு முதல் டோஸ் போட்டவர்களை பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

செவ்வாய் 11 ஜன 2022