மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: கடற்கரை சுண்டல்!

ரிலாக்ஸ் டைம்: கடற்கரை சுண்டல்!

கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கோயில்களில் 18ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து கடற்கரைக்குச் செல்லவும் தடை வரலாம். இந்த நிலையில் சுவையான கடற்கரை சுண்டல் சாப்பிட நினைப்பவர்கள் வீட்டிலேயே செய்து சூடாக செய்து ருசிக்கலாம்.

எப்படிச் செய்வது?

200 கிராம் பச்சைப்பட்டாணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில்விட்டு இறக்கவும். வேகவைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து அதனுடன் ஒரு கப் கேரட் துருவல், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய ஒரு கப் தேங்காய்த்துண்டுகள், மாங்காய்த்துண்டுகள், சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்பு

வெள்ளைப் பட்டாணியிலும் இந்த சுண்டலைச் செய்யலாம்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

செவ்வாய் 11 ஜன 2022