மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

முதியவர்களுக்கு வீட்டிலேயே பூஸ்டர் டோஸ்!

முதியவர்களுக்கு வீட்டிலேயே பூஸ்டர் டோஸ்!

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்துக்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 10) தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இல்லம் சென்று பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். மேலும் முதல் டோஸ் போட்டுவிட்டு, இரண்டாவது டோஸுக்காக காத்திருக்கும் 60 வயதுக்கு மேலுள்ள இணை நோயுள்ளவர்களுக்கும் வீட்டுக்கே சென்று இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர், 1913, 044-2538 4520, 4612 2300 ஆகிய எண்களில் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

செவ்வாய் 11 ஜன 2022