மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: மேத்தி பனீர் சப்பாத்தி ரோல்

கிச்சன் கீர்த்தனா: மேத்தி பனீர் சப்பாத்தி ரோல்

ஒவ்வொரு நாளும் ‘இன்று என்ன சமைப்பது...’ என்பதுதான் இல்லத்தரசிகள் மனத்தில் எழும் கேள்வி. எதையுமே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். இதோ உங்களது கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் ஒரு உணவு என்கிற வரிசையில் செவ்வாய்க்கிழமைக்கான சிறப்பு உணவு, மேத்தி பனீர் சப்பாத்தி ரோல்.

என்ன தேவை?

கோதுமை மாவு - 200 கிராம்

வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு

பனீர் துண்டுகள் - 10 (துருவிக்கொள்ளவும்)

கேரட் துருவல் - ஒரு கிண்ணம்

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெந்தயக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெந்தயக்கீரையை வதக்கி எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் வதக்கிய வெந்தயக்கீரை, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பின்னர் மாவுக் கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்துகொள்ளவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக இட்டு அதன் இருபுறத்தையும் நெய்விட்டு சுட்டெடுக்கவும். பின்னர் சப்பாத்தியின் மேல் பகுதியில் கேரட் துருவலையும், பனீர் துருவலையும் தூவி சப்பாத்தியை அப்படியே சுருட்டவும்.

குறிப்பு

வரிசையாக எல்லா சப்பாத்திகளையும் இதே முறையில் சுருட்டிவைத்தால் சாப்பிடுவது எளிது. அதேபோல ஜாம் அல்லது சாஸ் அல்லது வெண்ணெய் தடவியும் இதுபோலச் சுருட்டிச் சாப்பிடலாம்.

நேற்றைய ரெசிப்பி: பிஸிபேளாபாத்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 11 ஜன 2022