மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

சீசன் டிக்கெட் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

சீசன் டிக்கெட் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

சென்னை புறநகர் ரயில் பயணிகளின் மாதாந்திர சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி சான்றிதழின் கடைசி நான்கு இலக்க எண் அச்சிடப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 10) காலை 4 மணி முதல் ஜனவரி 31ஆம் தேதிவரை புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே விதித்துள்ளது.

அதில், 2022 ஜனவரி 10 முதல் புறநகர் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கவுண்ட்டரில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காட்டிய பிறகே பயணிகளுக்குப் பயண டிக்கெட்டுகளும், சீசன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும். இனி சீசன் டிக்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் அச்சிடப்படும். அடுத்தடுத்து சீசன் டிக்கெட்டுகளைப் புதுப்பிக்கும்போது, தடுப்பூசி சான்றிதழின் கடைசி நான்கு இலக்கங்களை அளிக்க வேண்டும்.

மற்ற பயணிகளை போலவே சீசன் டிக்கட் வைத்திருப்பவர்களும், பயணத்தின்போது ரயில்வே அதிகாரிகளிடம் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பயணிகள் ஆதார் எண், சீசன் டிக்கெட், கொரோனா தடுப்பூசி சான்றிதழை காட்டி புதிய சீசன் டிக்கெட் பெறலாம். இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, யூடிஎஸ் செல்போன் செயலி சேவை கிடைக்காது. இதற்கு பயணிகள் ரயில்வே நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 10 ஜன 2022