மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

துணிப்பை கொண்டுவந்தால் ஐந்து ரூபாய் தள்ளுபடி: அசத்தும் கோவை வியாபாரிகள்!

துணிப்பை கொண்டுவந்தால் ஐந்து ரூபாய் தள்ளுபடி: அசத்தும் கோவை வியாபாரிகள்!

தமிழக அரசு பிளாஸ்டிக் பை உபயோகத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் எதிரொலியாகக் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பழம் மற்றும் காய்கறி வியாபாரிகள், மஞ்சப்பை அல்லது துணிப்பை கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி தருகின்றனர். கோவை வியாபாரிகளின் இந்த முன்னெடுப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பேசியுள்ள ஆர்.எஸ்.புரத்தில் காய்கறி வியாபாரம் செய்துவரும் நடராஜன், “கொரோனா காரணமாக வியாபாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லைதான். இருந்தாலும், வாடிக்கையாளர்கள் துணிப்பை கொண்டு வந்தால் ஐந்து ரூபாய் தள்ளுபடி அளிக்கிறேன்.

இதனால் என் லாபம் குறைகிறது. அதாவது 700-800 ரூபாய் லாபம் பார்க்கும் சூழலில் தள்ளுபடி அளித்து 500 - 600 ரூபாய் லாபம் பார்க்கிறேன். ஆனாலும், இதில் எனக்கு ஒரு மன திருப்தி கிடைக்கிறது.

கோவையில் நாங்கள் பத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேர்ந்து துணிப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். எங்கள் முயற்சிக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் எங்கள் முயற்சியைப் பார்த்து சக வியாபாரிகள் எங்களைப்போல் தள்ளுபடி அளிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஒரு நாள் விற்பனையில் சுமார் 65 சதவிகிதம் மக்கள் துணிப்பை அல்லது மஞ்சப்பை எடுத்துவந்து காய்கறி வாங்குகிறார்கள். இதேபோல, மக்கள் அனைவருமே துணிப்பை கொண்டுவந்து வாங்கி செல்ல வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் எங்கள் முயற்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருவது எங்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது” என்றார்.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 10 ஜன 2022