மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

கொரோனா : முதல்வர் தனிப்பிரிவில் கட்டுப்பாடுகள்!

கொரோனா : முதல்வர் தனிப்பிரிவில் கட்டுப்பாடுகள்!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் மனு அளிக்க கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் அதிகமாக கூடுகின்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதலமைச்சரின் தனிப்பிரிவின் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொது மக்கள் மனு அளிக்கின்றனர். அது தவிர முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்தும் மனுக்களை அளிக்கின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்த்து, தளர்வுகள் அறிவிக்கும் வரை தலைமைச் செயலக வாயிலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து தபால், இணையதளம் மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை பெட்டியில் போட்டு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

-வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

திங்கள் 10 ஜன 2022