மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

நேரடி வகுப்புக்கு தடை : நீதிமன்றம் மறுப்பு!

நேரடி வகுப்புக்கு தடை : நீதிமன்றம் மறுப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் 1 முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 1 முதல் 6-8 வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் சில நாட்கள் பள்ளிகள் நடந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. அதனால் 1-9 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்தாண்டு பொதுத் தேர்வு திட்டமிட்டப்படி கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். அதனால் பொதுத் தேர்வு எழுதக் கூடிய 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அப்துல் வஹாபுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு, ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

பொதுத் தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்,” இன்று மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து விசயங்களிலும் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறிவிட்டனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 10 ஜன 2022