மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: புதினா பூண்டு சூப்!

ரிலாக்ஸ் டைம்: புதினா பூண்டு சூப்!

‘எண்ணெயைக் குறைவாகச் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; உணவில் அதிக கலோரிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அவசியம்’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தாலும் நம்மில் பலர் அதைக் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். கொரோனா பரவல் அதிகரித்துள்ள இன்றைய சூழ்நிலையில் குறைந்தபட்சம் ரிலாக்ஸ் டைமில் இந்த புதினா பூண்டு சூப் செய்து சாப்பிடலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் புதினாவுடன் தோலுரித்த மூன்று பூண்டு பற்கள் சேர்த்துத் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டிக் கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் கால் டீஸ்பூன் வெண்ணெய்விட்டு உருக்கி அரை டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வறுக்கவும். அதனுடன் காய்ச்சி ஆறவைத்த கால் கப் பால் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கட்டிதட்டாமல் கிளறி இறக்கவும். இதுவே வொயிட் சாஸ். புதினா கரைசலுடன் வொயிட் சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி ஒரு சிட்டிகை மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

பசியைத் தூண்டக்கூடிய இந்த சூப், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 10 ஜன 2022