மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதி: மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம்!

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதி: மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம்!

சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய நாளை முதல் (ஜனவரி 10) இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்தான் தினமும் இரவு ஊரடங்கும், இன்று (ஜனவரி 9) முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இன்று முழு ஊரடங்கில் அரசு, தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்ட போதிலும், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் குறைந்தளவு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க முடியும் என்றும் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31ஆம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை (ஜனவரி 10) முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

ஞாயிறு 9 ஜன 2022