மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

திருவண்ணாமலை அண்ணாமலை கோயில்: நாளை முதல் கட்டாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலை கோயில்: நாளை முதல் கட்டாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் சாமி தரிசனம் செய்ய தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தியிருப்பது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா ஏற்பட்டாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது, குறிப்பாக உயிரிழப்பு ஏற்படாது என்று கூறி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குதான், மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. அதனால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசும், மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதனுடன் கொரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் நாளை முதல் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகள் செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது, கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் இரண்டு டோஸ் செலுத்தியிருப்பது கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்து, பின்பு அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

ஞாயிறு 9 ஜன 2022