மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

சிஎம்சியில் 200 பேருக்கு கொரோனா: வெளிமாநிலத்தவருக்கு தடை!

சிஎம்சியில் 200 பேருக்கு கொரோனா: வெளிமாநிலத்தவருக்கு தடை!

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி எனப்படும் கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி மருத்துவனைக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்பட 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அனைவருக்கும் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தவர் சிகிச்சைக்கு இணையதளம் மூலம் முன்புதிவு செய்வதை நிறுத்தி வைக்க அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். புறநோயாளிகள் பிரிவில் தவிர்க்க இயலாத பாதிப்புகளுடன் வருவோருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

வேலூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சிஎம்சி மருத்துவமனைக்கு சாதாரண சிகிச்சைக்கு வெளிமாநிலத்தவரை அனுமதிக்க வேண்டாம் என்றும் விடுதியில் தங்கி உள்ள வெளிமாநிலத்தவரை சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஒரே இடத்தில் கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. சென்னை எம்ஐடியில் 141 மாணவர்களுக்கு கொரோனா, குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 400 பேர், தற்போது சிஎம்சியில் 200 பேர் என பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 9 ஜன 2022