மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

ஊரடங்கு: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

ஊரடங்கு: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

பொதுமக்கள் கொரோனா ஊரடங்கையொட்டி தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற இலவச உதவி எண்களை சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து அமலில் உள்ளது.

பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், சென்னை பெருநகர் காவல்துறையின் கொரோனா கட்டுப்பாட்டு அறை உதவி மையம் 94981 81236, 9498181239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய நான்கு செல்போன் எண்களை அறிவித்துள்ளது.

மேலே கூறப்பட்ட நான்கு எண்களுக்கும் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு மக்கள் பயன்பெறலாம்.

மேலும் அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும்112 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

ஞாயிறு 9 ஜன 2022