மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

ஒரேநாளில் 200 கோடியைத் தாண்டிய மதுவிற்பனை!

ஒரேநாளில் 200 கோடியைத் தாண்டிய மதுவிற்பனை!

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரேநாளில் மதுபான விற்பனை ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று(ஜனவரி 9) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக நேற்றே மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை சமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டனர். அதுபோன்று டாஸ்மாக் கடைகளும் முழு ஊரடங்கு நாளில் இயங்காது என்பதால், குடிமகன்களும் நேற்றே நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான வகைகளை வாங்கி வைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கும், திருச்சியில் ரூ.42.50 கோடிக்கும், கோவையில் ரூ.41.28 கோடிக்கும், சேலத்தில் ரூ.40.85 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

வழக்கமாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்குதான் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக இருக்கும். ஒருநாள் வசூலே 100 கோடிக்கு மேல் இருக்கும். ஆனால், முழு ஊரடங்கிற்கு முந்தைய நாளான நேற்று நடைபெற்ற மது விற்பனை கடந்த புத்தாண்டையொட்டி நடைபெற்ற மதுவிற்பனையை பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தையொட்டி டிசம்பர் 31, 2021 அன்று தமிழ்நாடு முழுவதும் 147.69 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. தற்போது அதனைவிட 70 கோடி ரூபாய்க்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. புத்தாண்டில் குறைந்த மதுவிற்பனையை நேற்றைய விற்பனை ஈடு செய்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 9 ஜன 2022