மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: மஞ்சள் பூசணி அல்வா!

ரிலாக்ஸ் டைம்: மஞ்சள் பூசணி அல்வா!

மார்கழியில் பூக்கும் பூசணிப்பூக்கள் மனத்துக்கு மலர்ச்சியைத் தருவதுபோல் பூசணிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. சண்டே ஸ்பெஷலாக இந்த மஞ்சள் பூசணி அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சூடாக்கி அதில் இரண்டு கப் மஞ்சள் பூசணித்துருவலைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் முக்கால் கப் காய்ச்சிய பாலைச் சேர்த்து பூசணித்துருவலை பாலில் நன்கு வேகவிடவும். பால் சுண்டி வரும்போது கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், ஒன்று முதல் ஒன்றரை கப் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்துச் சேர்த்துக் கலவையைக் கிளறவும். கலவையானது அல்வா பதத்துக்கு சுருண்டு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.

சிறப்பு

பூசணிக்காயில் உள்ள அதிகமாக வைட்டமின் சி ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு செல்கள் மிகவும் திறம்பட செயல்பட உதவும்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

ஞாயிறு 9 ஜன 2022