மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

காணாமல் போன வோடபோன் கோபுரம்!

காணாமல் போன வோடபோன் கோபுரம்!

திரைப்படம் ஒன்றில் கிணற்றைக் காணவில்லை என கூறும் வடிவேலுவின் காமெடி புகாரானது, ஆங்காங்கே நிஜத்திலும் அரங்கேறி வருகிறது. குளத்தை காணவில்லை, நிலத்தை காணவில்லை என பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற வேளையில் தற்போது வினோதமாக புகார் ஒன்று வந்துள்ளது.

மதுரையில் இரண்டு நாட்களாக வோடபோன் செல்போன் நிறுவனத்தின் கோபுரத்தை காணவில்லை என்று அந்நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூர், அமராவதி தெருவில் பிரபல வோடபோன் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தொலைத்தொடர்பு சரியாக கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்த்தபோதுதான், கோபுரம் காணாமல் போனது தெரியவந்தது.

செல்போன் கோபுரம் காணாமல் போனது குறித்து நிறுவன மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், செல்போன் கோபுரம் திருடுபோனது உறுதியானது. செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 8 ஜன 2022