மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: தானிய பிரட்டல்!

ரிலாக்ஸ் டைம்: தானிய பிரட்டல்!

தற்போதைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள் அவசியம். அதற்கு இந்த தானிய பிரட்டல் பெஸ்ட் சாய்ஸ்.

எப்படிச் செய்வது?

குக்கரில் ஒரு கப் முளைகட்டிய தானியக் கலவை (பச்சைப் பயறு, கொள்ளு, காராமணி), ஒரு கப் முட்டைகோஸ் அல்லது வெள்ளரி துண்டுகள், பூண்டு ஐந்து பற்கள், ஒரு டீஸ்பூன்,இஞ்சித் துருவல், இரண்டு டீஸ்பூன் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 முதல் 5 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்

சிறப்பு

அனைவருக்கும் ஏற்ற இந்த தானிய பிரட்டல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 8 ஜன 2022