மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: வரகு இனிப்புப் பொங்கல்

கிச்சன் கீர்த்தனா: வரகு இனிப்புப் பொங்கல்

சிறுதானிய உணவே நம் பாரம்பரிய உணவுமுறை. அது மட்டுமல்ல... சிறுதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இனிமை சேர்க்கும். நல்லவை எல்லாம் அள்ளித்தரும். அதற்கு இந்த வரகு இனிப்புப் பொங்கல் உதவும்.

என்ன தேவை?

வரகு, வெல்லம் - தலா 200 கிராம்

முந்திரிப்பருப்பு, திராட்சை - தேவைக்கேற்ப

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

முதலில் வெல்லத்தைத் துருவிக்கொள்ளவும். வரகை இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் களையவும். ஒரு பங்கு வரகுக்கு இரண்டரை பங்கு என்கிற அளவில் தண்ணீர்விட்டு குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு, திராட்சையைச் சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த வரகுடன் துருவிய வெல்லம் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். வெல்லம் முழுவதுமாகக் கரைந்ததும் மறுபடியும் ஐந்து நிமிடங்களுக்குக் கலவையை அடிபிடிக்காமல் கிளறவும். பின்னர் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்து, மீதமுள்ள நெய்விட்டுக் கிளறி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: தினை கீரை சாதம்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

சனி 8 ஜன 2022