மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜன 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிக்கு ஜனவரி 8ஆம் தேதியும், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு ஜனவரி 9ஆம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும், முழு ஊரடங்கு நாளில் போட்டித் தேர்வர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனவரி மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று நேற்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இந்த நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று(ஜனவரி 7) வெளியிட்டுள் அறிவிப்பில், “கொரோனா வைரஸின் பெருந்தொற்றின் அதீத பரவல் மற்றும் ஒமிக்ரான் நோயினை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசினால் தற்போது மாநிலம் முழுவதும் ஜனவரி 9ஆம் அன்று முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுபோக்குவரத்து மற்றும் உணவிற்கான வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும், இதுகுறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம். கட்டடக் கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நாளை (ஜனவரி 8) நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 7 ஜன 2022