மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜன 2022

ஊரடங்கு கட்டுப்பாடுகள்: மெட்ரோ ரயில் அறிவிப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகள்: மெட்ரோ ரயில் அறிவிப்பு!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்த சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (ஜனவரி 6) முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், கூட்டம் இல்லாத நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.

அனைத்து ரயில் நிலையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணிக்குத் தொடங்கி இரவு 10.00 மணிக்கு முனையத்தை வந்தடையும்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வியாழன் 6 ஜன 2022