மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

வீட்டுத் தனிமை: புதிய வழிகாட்டுதல்கள்!

வீட்டுத் தனிமை: புதிய வழிகாட்டுதல்கள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், அறிகுறி இல்லாத மற்றும் குறைந்த பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் வீட்டுத் தனிமையில் இருந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது கட்டுப்பாடுகளை கடுமையாக்கியும், புதிய கட்டுப்பாடுகளை விதித்தும் வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா பாதிப்பு இருந்தால் அச்சப்பட வேண்டியதில்லை, உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது.

சுயவைத்தியம் பார்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்; மருத்துவ ஆலோசனையின்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மூன்று நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லாமல் இருந்தால் 7 நாளுக்கு பிறகு தனிமை முடிந்து வெளியே வரலாம்.

மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு

அதுபோன்று, தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டு விமான பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மற்ற நகரங்களுக்கு பயணிக்கும் உள்நாட்டு பயணிகள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையும் போட்டிருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட நெகடிவ் சான்றிதழ் கட்டாயம். இரண்டாவது டோஸ் போட்டு 15 நாட்கள் நிறைவடைந்த பிறகுதான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது, புதிதாக சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் உள்நாட்டு பயணிகளுக்கும் ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்று உள்நாட்டு விமானங்களில் பெற்றோருடன் பயணிக்கும் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 5 ஜன 2022