மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: பேரீச்சை அல்வா!

ரிலாக்ஸ் டைம்: பேரீச்சை அல்வா!

பேரீச்சை பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய ரிபோஃப்ளாவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்துச் சத்துகளும்கொண்ட ஒரே பழம் பேரீச்சை பழம்தான். சத்தான பேரீச்சையில் அல்வா செய்து சாப்பிட்டு, ரிலாக்ஸ் டைமை ஹெல்த்தி டைமாக்கலாம்.

எப்படிச் செய்வது?

காய்ச்சி ஆறவைத்த ஒரு கப் பாலுடன் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய ஒரு கப் பேரீச்சம்பழத் துண்டுகள் சேர்த்து குழைய வேகவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு காய்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் முந்திரி, ஒரு டேபிள்ஸ்பூன் திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் அரைத்த விழுது, அரை கப் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி வரும்போது அரை கப் சர்க்கரை இல்லாத கோவா, இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை கொண்டு அலங்கரித்துச் சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 5 ஜன 2022