மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: வரகு தேங்காய் சாதம்

கிச்சன் கீர்த்தனா: வரகு தேங்காய் சாதம்

இனிவரும் காலம் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய சிறுதானியங்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவு மக்களிடத்தில் சிறுதானியங்களின் சிறப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வத்துக்குச் சுவை சேர்க்கும் அருமையான, துல்லியமான ரெசிப்பிகள் நம் கைவசம் இருந்தால்தானே சமையலறை கமகமக்கும்... இதோ அதற்கான வரகு தேங்காய் சாதம் ரெசிப்பி.

என்ன தேவை?

வரகு - 200 கிராம்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுந்து, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வரகை 15 நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்துகொள்ளவும். ஒரு பங்கு வரகுக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். பிறகு வெந்த வரகை ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு இதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்தால் வரகு தேங்காய் சாதம் தயார்.

நேற்றைய ரெசிப்பி: வரகு பருப்பு சாதம்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

புதன் 5 ஜன 2022