மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

ரிலாக்ஸ் டைம்: கவுனி அரிசி இனிப்பு!

ரிலாக்ஸ் டைம்: கவுனி அரிசி இனிப்பு!

புத்தாண்டைத் தொடர்ந்து இன்று விடுமுறை நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது பலருக்கு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க, சத்தான இந்த கவுனி அரிசி இனிப்பு உதவும்.

எப்படிச் செய்வது?

அரை கப் கவுனி அரிசியை நன்றாக ஊறவைக்கவும். ஊறிய அரிசியை குக்கரில் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 விசில் வரும் வரை நன்கு வேகவைக்கவும். சிறிதளவு நெய்யில் 10 முந்திரிப்பருப்புகளை வறுத்துக்கொள்ளவும். ஐந்து ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். பிறகு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின்னர் ஒரு கப் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டியானதும் வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், ஒரு கப் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

ஞாயிறு 2 ஜன 2022