மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு இல்லை – நிர்மலா சீதாராமன்

ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு இல்லை – நிர்மலா சீதாராமன்

இன்று - ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியானது 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக அதிகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வரி விதிப்பு ஜவுளித் துறையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும், ஜனவரி 1க்கு மேல் துணிகள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இது ஜவுளித் துறையினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஜிஎஸ்டி அதிகரிப்புக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஜனவரி 1 ஆம் தேதி உயர்த்துவதை ஒத்திவைக்கும்படி மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 46ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று (டிசம்பர் 31) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள், மாநில அரசுகளின் கோரிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்படவில்லை என்றும், வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பை மாற்றியமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காலணிகள் மீதான வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை” என்றும் நிதியமைச்சர் கூறினார். எனவே, ஜனவரி 1ஆம் தேதி முதல் காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரியானது 12 சதவிகிதமாக உயர்த்தி வசூலிக்கப்படும்.

-ராஜ்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 1 ஜன 2022