மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

சிறுவர்களுக்கு தடுப்பூசி: பள்ளிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுரை!

சிறுவர்களுக்கு தடுப்பூசி: பள்ளிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுரை!

தமிழ்நாட்டில் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 3ஆம் தேதி முதல் 15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று முதல் அதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 15-18 வயதுடைய 33 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்பதால், தமிழ்நாடு சுகாதாரத் துறையிடம் 25 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாராக உள்ளதாக நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற 3ஆம் தேதி தொடங்குகிறது. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கோவின் செயலியில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஜனவரி 3ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூர் பள்ளியில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார். அதேநாளில் பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும்.

2007 மற்றும் அதற்கு முன்பு பிறந்த பள்ளி குழந்தைகள் இதற்கு தகுதியானவர்கள். அவர்கள் தங்கள் விவரங்களை பள்ளிக்கு அளிக்க வேண்டும்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளில் மையம் அமைக்க போதிய இடம் ஒதுக்க வேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்கவும், தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்கவும் ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும்.

சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பள்ளி அதிகாரிகள் கண்காணிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 1 ஜன 2022