மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

இந்தாண்டு புத்தாண்டு மதுவிற்பனை குறைவு!

இந்தாண்டு புத்தாண்டு மதுவிற்பனை குறைவு!

புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுவிற்பனை கடந்த ஆண்டை விட குறைவாக நடந்துள்ளது.

பொதுவாகவே மதுபானக் கடைகளில் எப்போதும் அமோக விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல்,தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் மதுவிற்பனை நடக்கும். இது வழக்கமான ஒன்று. டாஸ்மாக் விற்பனையை பொறுத்தவரை வார நாட்களில் 70 -75 கோடி ரூபாய் வரையிலும், வார இறுதி நாட்களில் 90 கோடி ரூபாய் வரையிலும் மதுபானங்கள் விற்பனையாகும்.

புதுவருட பிறப்பை புத்தாடை அணிந்து, கேக் வெட்டி, இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கி மக்கள் கொண்டாடுவார்கள். மற்றொரு பக்கம் மதுபானங்களை வாங்கி புத்தாண்டை கொண்டாடுவது ‘குடி’மகன்களின் வழக்கம்.

அதுபோன்று டிசம்பர் 31ஆம் தேதி இரவு அன்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.147.69கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தில் ரூ.41.45 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.26.52 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.25.43 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.27.44 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.26.85 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளது.

பண்டிகை காலங்களில் மதுவிற்பனை அமோகமாக நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக முந்தைய ஆண்டு பண்டிகைகளை விட தற்போது எந்தளவிற்கு அதிகமாக விற்பனையாகியுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

அந்தவகையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு புத்தாண்டு பண்டிகைக்கு மதுவிற்பனை குறைவாகவே நடந்துள்ளது.

கடந்த 2021 புத்தாண்டை ஒட்டி 159 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.148 கோடிக்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது. கிட்டதட்ட ரூ.11 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனைகுறைந்துள்ளது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தடை, மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் உள்ளிட்ட போலீஸ் கெடுபிடிகள் உள்ளிட்ட காரணங்களால்தான் மதுவிற்பனை குறைந்துள்ளது என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

சனி 1 ஜன 2022