மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

புத்தாண்டில் சோகம்: பட்டாசு விபத்தில் ஐவர் பலி!

புத்தாண்டில் சோகம்: பட்டாசு விபத்தில் ஐவர் பலி!

சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்,சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தயாரிப்பது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அதேவேளையில், இந்த பகுதிகளில் பட்டாசு விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

சிவகாசி அருகே புதுப்பட்டியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் இன்று( 2022, ஜனவரி-1) காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்து பொருட்களை கலக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டது. விபத்தில் ஆலையில் இருந்த 10 அறைகளில் 6 அறைகள் விபத்தில் இடிந்து தரைமட்டமாகின.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், எட்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிதொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 11 மணி அளவில் மழை பெய்ததால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது, அதன் பிறகு மீட்பு பணி தொடர்ந்தது. இதுகுறித்து வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு அன்று பட்டாசு விபத்தினால் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

சனி 1 ஜன 2022