ஜிஎஸ்டி மாற்றங்கள்: புத்தாண்டு முதல் விலை உயரும் பொருள்கள்!

public

புத்தாண்டு பிறக்கும் தினம் (ஜனவரி 1) முதல் ஜிஎஸ்டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. அதில் முதலாவதாக, ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்துச் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி புதிதாக விதிக்கப்படுகிறது.

**ஓலா, ஊபர்**

இதற்கு முன் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்துப் பயணங்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதன்படி நாளை முதல் (சனிக்கிழமை) வாடகை கார்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

ரயில், பேருந்து என அனைத்துக்கும் இந்த ஜிஎஸ்டி வரி பொருந்தும். ஆட்டோவைப் பொறுத்தவரை, ஆன்லைன் அல்லாத சேவைக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஓலா ஆட்டோக்களுக்கு ஜிஎஸ்டி வரி உண்டு.

**ஸ்விக்கி, ஸொமேட்டோ**

இதுவரை உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஸொமேட்டோ அப்ளிகேஷனுக்கு ஜிஎஸ்டி வரி விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. நாளை ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்விக்கி, ஸொமேட்டோவில் மக்கள் ஆர்டர் செய்யப்படும் உணவுப் பொருள்களின் மீது 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

**பட்டு சேலைகள்**

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜவுளிப் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்தப் புதிய விலையானது 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பட்டுச்சேலை மற்றும் அதைத் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்கிறது.

ஒட்டுமொத்த ஜவுளித் துறையின்கீழ், பட்டு கைத்தறி நெசவும் வருவதால், ஜிஎஸ்டி உயர்வு வாயிலாக, பட்டுச் சேலைகளின் விலை கணிசமாக உயர உள்ளது. சாதாரண பட்டுச் சேலையின் விலையும் உயரும் என்பதால், பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை, கைத்தறியில் நெய்யும் நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் எனக் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன.

**காலணி, ரெடிமேட் துணிகள்**

காலணி மற்றும் ரெடிமேடு துணி வகைகளுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தப் பொருள்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. இதுவும் வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. காட்டன் துணி வகைகளுக்கு மட்டும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *