^கிச்சன் கீர்த்தனா: சிவப்பரிசி தோசை

public

�வங்கதேசம், கென்யா, நேபாள், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுத்த முன்னெடுப்பால் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கிறது. ஆரோக்கியம், சூழலியல் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியப் பயிர் வகைகளான சிறுதானியங்களின் மீது உலகளாவிய ஈர்ப்பை உண்டாக்குவதற்கு இந்த அறிவிப்பு மிகவும் உதவும் நிலையில் நாமும் ஊட்டச்சத்து மிகுந்த சிவப்பரிசி தோசை செய்து சிறுதானிய பெருமையை மேம்படுத்துவோம்.

**என்ன தேவை?**

சிவப்பரிசி, இட்லி அரிசி – தலா ஒரு கப்

உளுந்து – கால் கப்

வெந்தயம், துவரம்பருப்பு,

கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

உப்பு, எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து 6-8 மணி நேரம் புளிக்கவைக்கவும். புளித்து எழும்பியுள்ள மாவில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: பறங்கிக்காய் சுரைக்காய் அடை](https://www.minnambalam.com/public/2021/12/30/1/pumkin-Calabash-adai)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *