மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 டிச 2021

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேலதூவல் கிராமம் அருகே கீழத்தூவல் காவல் நிலைய காவல்துறையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தவழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். மணிகண்டனை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்பு, மணிகண்டனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டனுக்கு இரவில் இரத்தவாந்தி ஏற்பட்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் தாக்கியதால்தான் மணிகண்டன் உயிரிழந்தார். அதனால், அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிகண்டனின் சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் புகார் அளித்துள்ளார். உரிய நீதி கிடைக்காமல் மணிகண்டனின் உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், மாணவர் மணிகண்டன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என்று சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவருக்கு அறிவுரை சொல்லியே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்” என்று விளக்கம் அளித்துள்ளதுடன், விசாரணைக்கு அழைத்து வந்த மாணவன் மணிகண்டனை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றதற்கான கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று எஸ்பி உறுதி அளித்ததையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், மணிகண்டனின் உடலை வாங்கவில்லை.

இந்த நிலையில், மணிகண்டனை காவல்நிலையத்தில் வைத்திருக்கும் போதும், அவரை அவரது பெற்றோர்கள் வந்து அழைத்து சென்றதும் தொடர்பான காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொது செயலாளார் டிடிவி தினகரன் மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளனர்.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

திங்கள் 6 டிச 2021