[மதுரையில் கிடைக்கும் கொரோனா பால்!

public

மதுரை அருகே இளைஞர் ஒருவர் கொரோனா பால் என்ற பெயரில் மூலிகை பாலை விற்பனை செய்து வருகிறார்.

உலகநாடுகள் ஒமிக்ரான் எனும் புதிய மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸின் பரவலால் அச்சத்தில் உள்ளன. பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே சாலமோன் ராஜ் என்பவர் சாயா கருப்பட்டி காபி என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த கடையில் டீ, காபி, பால் ஆகியவற்றுடன் கொரோனா பால் என்ற ஒன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பலரும் விரும்பி வாங்கி குடிக்கின்றனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் சாலமோன் ராஜ் கூறுகையில், சீனி நமது உடலுக்கு கேடு விளைவிப்பது. அதனால் பனங்கருப்பட்டி மற்றும் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தி காபி, பால்,டீ தயாரிக்கிறோம். இதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா காலம் என்பதால், கொரோனா பால் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். பாலில், மிளகு, மஞ்சள் தூள், சுக்கு ஆகியவற்றுடன் கருப்பட்டியை கலந்து போடப்படும் கொரோனா பாலுக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பயிறு வகைகள், கடலை எண்ணெயில் பொரிக்கப்பட்ட உளுந்தவடை, பனியாராம் ஆகிய ஆரோக்கியமான உணவுகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன” என்று கூறினார்.

பாலில் மிளகு, மஞ்சள் தூள் போட்டு குடிப்பதால் நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதுபோன்று பல நன்மைகள் இந்த பாலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *