^சம்பளம் பிடித்தம் அறிவிப்பு வாபஸ்!

public

தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் சம்பளம் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசு அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தற்போது ஒமிக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை மண்டல தலைமை பொறியாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்தியிருக்க வேண்டும். அப்படி செலுத்தவில்லையென்றால், டிசம்பர் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலானதுடன், மின்வாரிய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரை மண்டல மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் உமாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளம் நிறுத்தம் செய்யப்படும் என நாங்கள் முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளோம். மேலும் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்” என்று

தெரிவிக்கப்பட்டுள்ளது.

**பொது இடங்களுக்கு செல்லத் தடை**

ஏற்கனவே கிருஷ்ணகிரியில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் காய்கறி சந்தை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூரிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் டீக்கடை, ஹோட்டல், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், துணிக்கடை, பெட்ரோல் பங்க், திரையரங்கு உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *