மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 நவ 2021

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

ஏர்டெல், வோடபோன்-ஐடியாவைத் தொடர்ந்து, ஜியோவும் பிரீபெய்டு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது நாளை (டிசம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச ரீசார்ஜான 28 நாட்களுக்கான பேக்கேஜ் ரூ.75இல் இருந்து ரூ.91 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதுபோல் 28 நாட்களுக்கான மாதம் 2ஜிபி, அளவற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் பேக்கேஜ் ரூ.129இல் இருந்து ரூ.155 ஆகவும், தினமும் 1.5 ஜிபி, அளவற்ற அழைப்பு பேக்கேஜ் ரூ.199இல் இருந்து ரூ.239 ஆகவும், தினமும் 2 ஜிபி, அளவற்ற அழைப்பு பேக்கேஜ் ரூ.249இல் இருந்து ரூ.299 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல், 56 நாட்களுக்கான தினமும் 1.5 ஜிபி, அளவற்ற அழைப்பு பேக்கேஜ் ரூ.399இல் இருந்து ரூ.479, தினமும் 2 ஜிபி பேக்கேஜ் ரூ.444இல் இருந்து ரூ.533 ஆகவும், உயர்த்தப்படுகிறது.

84 நாட்களுக்கான 6 ஜிபி, அளவற்ற அழைப்புகள் பேக்கேஜ் ரூ.329இல் இருந்து ரூ.395 ஆகவும், தினமும் அளவற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கொண்ட 1.5 ஜிபி பேக்கேஜ் ரூ.555இல் இருந்து ரூ.666 ஆகவும், 2 ஜிபி பேக்கேஜ் ரூ.599இல் இருந்து ரூ.719 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

ஓராண்டு பேக்கேஜ்களான ஆண்டுக்கு 24 ஜிபி, அளவற்ற அழைப்புகள் பேக்கேஜ் ரூ.1,299இல் இருந்து ரூ.1,599 ஆகவும், அளவற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி பேக்கேஜ் ரூ.2,399இல் இருந்து ரூ.2,879 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இது நாளை (டிசம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஏர்டெல், வோடபோன்-ஐடியாவும் பிரீபெய்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

செவ்வாய் 30 நவ 2021