மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 நவ 2021

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது!

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

எரிபொருள் முதல் சமையல் எரிவாயு வரை விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு முதல் பற்பசை வரை பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்க உள்ளது.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தப்படும் நுகர்பொருட்களைத் தயாரிக்கக் கூடிய ஐடிசி ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை 4 சதவிகிதம் முதல் 33 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. எரிபொருள் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள் விலை உயர்வும் விலை ஏற்றத்தை தவிர்க்க இயலாததாக இருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன.

ஹிந்துஸ்தான் யூனி லிவர் தயாரிக்கும் டவ் சோப்புகள், ஷாம்பூகள் மற்றும் பெர்சனல் கேர் பொருட்களின் விலை அடுத்த சில நாட்களில் 12 சதவிகிதம் வரை உயர்த்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ரின் சோப்பு விலையை 5 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த நிறுவனம் விலையேற்றத்தை மேற்கொள்கிறது.

மேலும் லக்ஸ் சோப்பு, ஷாம்பூகளின் விலையை 10 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்துகிறது. 19 மில்லி அளவு கொண்ட கம்போர்ட் கண்டிஷனர் விலை 33 சதவிகிதம் வரை உயர்த்தப்படுகிறது.

பார்லேஜி நிறுவனம் மூன்று மாதங்களில் 15 சதவிகிதம் வரை பிஸ்கட் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் 20 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு எடுத்துள்ளது.

டைகர், குட் டே, மில்க் பிக்கீஸ் உள்ளிட்ட பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் 7.5 சதவிகிதம், அதற்குப் பிறகு 10 சதவிகிதம் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஐடிசி நிறுவனம் பெர்பியும்கள் விலை 7 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. சோப்பு விலை 9 சதவிகிதம் உயர்த்த உள்ளது ஐடிசி நிறுவனம்.

மேலும் பல நிறுவனங்கள், நொறுக்குத் தீனிகள், தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள் விலையை உயர்த்த முடிவு எடுத்துள்ளன.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

செவ்வாய் 30 நவ 2021