மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 நவ 2021

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு ஒன்றிய அரசு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்க இருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

முன்பெல்லாம் ஆட்டோவில் செல்ல நினைப்பவர்கள் சாலையில் செல்லும் ஆட்டோவை நிறுத்தி அல்லது ஸ்டாண்டில் நிற்கும் ஆட்டோ ஓட்டுநரிடம் கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்தனர். இப்போது செயலிகள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு ஒன்றிய அரசு 5 சதவிகித ஜிஎஸ்டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இதனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜிஎஸ்டி. விலக்கு நீடிக்கும் என்று ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது.

இந்த உத்தரவு, இருவிதமான ஆட்டோ சேவையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும், ஆன்லைன் பதிவு ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் இத்துறையைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

ஞாயிறு 28 நவ 2021