மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 நவ 2021

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. சராசரி அளவை விடக் கூடுதலாக 76சதவீத மழைப் பதிவாகியுள்ளதாகப் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் தீவு போல் காட்சியளிக்கின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் தமிழகத்தில் புயல் எதுவும் உருவாகவில்லை என்றாலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகின.

வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 11ஆம் தேதி சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவில்லை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது.

இந்தமழை பாதிப்பிலிருந்தே தமிழக மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்நிலையில் ஒரு நாள் தாமதமாக 30ஆம் தேதி , காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிய பின் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா - ஒடிசா இடையே கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், நாகை, மயிலாடுதுறை ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

-பிரியா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

ஞாயிறு 28 நவ 2021