மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா வேட்டை!

மோப்ப நாய் உதவியுடன்  கஞ்சா வேட்டை!

வருசநாடு பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா தேடுதல் வேட்டை நடந்தது.

வருசநாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிங்கராஜபுரம், பண்டாரவூத்து, பூசணூத்து உள்ளிட்ட கிராம பகுதிகளில் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி அதைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தேனி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீஸார் கஞ்சா விற்பனை தொடர்பாக ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று (நவம்பர் 25) சிங்கராஜபுரம், பண்டாரவூத்து உள்ளிட்ட கிராமங்களில் தனியார் தோட்டம், மூலவைகை ஆற்றுப்படுகைகளில் மோப்பநாய் வெற்றி மூலம் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருக்கிறார்களா என்று போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஐந்து மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனையில் கஞ்சா எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 26 நவ 2021