மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவன்... கரையோரம் காத்திருக்கும் மனைவி!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவன்... கரையோரம் காத்திருக்கும் மனைவி!

வேலூர் மாவட்டத்தைத் தன் கொடிய கரங்களால் கலைத்துப்போட்டிருக்கிறது வடகிழக்குப் பருவமழை. குடியிருப்புகளை வாரிச்சுருட்டிய வெள்ளக்காட்டுக்குள் கேட்கும் மரண ஓலம், நம் மனதை நடுநடுங்க வைக்கிறது.

வேலூர் மாவட்டத்தில், அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து நவம்பர் 19-ம் தேதி வரை, மழை பாதிப்பால் மட்டுமே 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 436 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. சுமார் 4,000 பேர் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு மரணத்துக்குப் பின்னாலும் ஆயிரம் கனவுகள், உறவுகள் சிதைந்துபோயிருக்கின்றன. மீளாத உயிர்களையும், பிரிவில் தவிக்கும் உறவுகளையும் கண்டு கண்ணீர் சிந்துகிறது வேலூர். அவற்றில் ஒன்று இது...

கே.வி.குப்பம் அருகேயுள்ள வடுகந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மனோகரனுக்கு திவ்யா என்ற மனைவியும், மூன்றரை வயது, ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

விடுமுறையில் ஊருக்கு வந்த மனோகரன், நவம்பர் 18ஆம் தேதி மாலை பைக்கில் விரிஞ்சிபுரம் பாலாற்றுத் தரைப்பாலத்தைக் கடந்து சென்றிருக்கிறார். மீண்டும் அந்த வழியாக அவர் வந்தபோது, பைக்குடன் அவரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது. அந்தக் காட்சி, தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை மனோகரன் கிடைக்கவில்லை.

‘கணவன் மீண்டுவருவார்’ என்ற நம்பிக்கையுடன் கையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாக இரண்டு பெண் குழந்தைகளுடன் பாலாற்றின் கரையோரம் கண்ணீரோடு காத்துக்கிடக்கிறார் அவரின் மனைவி திவ்யா.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 26 நவ 2021