மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா?

தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா?

விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா என சிஎம்டிஏ மார்கெட் கமிட்டி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மழை காரணமாக தக்காளி கடும் விலையேற்றம் கண்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பண்ணை பசுமை கடைகள் மற்றும் நகர்ப்புற ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது தக்காளியின் விலை குறைந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேடு சந்தையில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக இன்று(நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், எங்கள் சங்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் 150, 300, 600 சதுர அடி கொண்ட கடையைதான் வைத்துள்ளனர். 1200 முதல் 2400 பரப்பளவு சதுர அடி கொண்ட கடைகளுக்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் தங்களை போன்ற சிறிய கடைகளை கொண்டவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்படாததால் மைதானத்தை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிஎம்டிஏ தரப்பில், லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளதாகவும், அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிகள் சரியானதுதான் என்ற போதிலும், தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து ஒரு லாரியை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பட்சத்தில் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து சரக்கை இறக்க மட்டும் அனுமதி அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

தக்காளி விலை குறையும் வரை ஓரிரு வாரங்களுக்கு லாரிகளை நிறுத்தி கொள்ள அனுமதிப்பது குறித்து சிஎம்டிஏ, கோயம்பேடு மார்கெட் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (நவம்பர் 29) தள்ளிவைத்தார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 26 நவ 2021