மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

ரிலாக்ஸ் டைம்: ஸ்வீட்கார்ன் பக்கோடா!

ரிலாக்ஸ் டைம்: ஸ்வீட்கார்ன் பக்கோடா!

ரிலாக்ஸ் டைமிலும், விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடாதான். இந்த மழை நாளில் சூடான இந்த ஸ்வீட்கார்ன் பக்கோடா உடனடி புத்துணர்ச்சி தரும்.

எப்படிச் செய்வது?

அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருசேர புரட்டிக்கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின்னர் நறுக்கிய ஒரு கப் ஸ்வீட்கார்ன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து மாவைக் கிள்ளிப் போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

ஸ்வீட்கார்னில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் பார்வை மற்றும் சரும நலம் காக்க உதவும்.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 26 நவ 2021