மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

பக்கத்திலேயே கடல் இருந்தாலும் இதுவரை கடல்நீரைச் சந்திக்காத திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் முதன்முறையாக மழைநீர் புகுந்துள்ளது.

நெல்லை மற்றும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. பக்தர்கள் கோயிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

கோயிலின் உள் மற்றும் வெளி பிராகாரங்களில் மழைநீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழைநீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 26 நவ 2021