மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

மாணவி தற்கொலை: பள்ளி முதல்வருக்கு ஜாமீன்!

மாணவி தற்கொலை: பள்ளி முதல்வருக்கு ஜாமீன்!

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பொன்தாரணி (17) என்ற மாணவி, ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த நவம்பர் 11ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், இந்தச் சம்பவத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி நடைபெற்ற போராட்டம் வலுவடைந்ததையடுத்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் 12 மணி நேர போலீஸாரின் விசாரணையைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றப் பொறுப்பு நீதிபதி நந்தினி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நவம்பர் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி, மீரா ஜாக்சன் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி குலசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பிலும், மாணவியின் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சத்தை 30 நாட்களுக்குள் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வியாழன் 25 நவ 2021