மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை: உயர் நீதிமன்றம்!

மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை: உயர் நீதிமன்றம்!

மதம் மாறியவர்களுக்கு, கலப்பு திருமண சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த இவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச்சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம்புரிந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு மணச் சான்றிதழ் வழங்க முடியாது எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று(நவம்பர் 25) நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 1997ஆம் ஆண்டு அரசாணைப்படி மதம் மாறிய நபர்களுக்கு கலப்பு மணச் சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மதம் மாறியவருக்கு கலப்பு மணச் சான்று வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

‘மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, ‘ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் – மனைவிக்கு கலப்பு திருமண சான்றிதழ் பெற தகுதியில்லை’ எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து, “மதம் மாறியவருக்கு கலப்பு திருமணத்திற்கான சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 25 நவ 2021