மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

பாடங்களை புரியும்படி நடத்துங்கள்: கல்லூரி கல்வி இயக்குநர்!

பாடங்களை புரியும்படி நடத்துங்கள்: கல்லூரி கல்வி இயக்குநர்!

நேரடி வகுப்பில் கல்லூரி மாணவர்களுக்கு முழுவதும் புரியும்படி பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் முறையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கிறோம். ஆனால் தேர்வு நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அறிவித்தது. இதையடுத்து செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் என்றும், பாடங்களை முழுவதும் நடத்தி முடிக்க வாரத்தில் ஆறு நாட்களும் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் அனைத்து மண்டல இணை இயக்குநர்கள், கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், உயர் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், கல்லூரிகளில் வாரத்தில் ஆறு நாள்கள் நேரடி வகுப்புகளில் நடப்புப் பருவத்திற்கான பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். ஜனவரி 20ஆம் தேதிமுதல் நடைபெறும் செமஸ்டர் தேர்வினை மாணவர்கள் எளிதில் எழுதும் வகையில் மாதிரித் தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைக் களையும் வகையிலும், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுமையாகப் புரியும்படியும் நடத்தி முடிக்க வேண்டும். வினாத்தாளையும் எளிமையான முறையில் வடிவமைக்க வேண்டும்.

கல்லூரிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதையும், வகுப்பறை போதுமான அளவில் இல்லை என்ற புகார் எழாத வகையில் கல்லூரிகளின் முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வியாழன் 25 நவ 2021