மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகுப்பால்!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகுப்பால்!

இந்த சீசனில் அடிக்கடி சூடாக சாப்பிடத் தோன்றும். அப்படிச் சாப்பிடும்போது உடலுக்குக் கெடுதல் தராத உணவைச் சாப்பிடுவது நல்லது. அதற்கு இந்த சத்தான, சூடான கேழ்வரகுப்பால் பெஸ்ட் சாய்ஸ்.

எப்படிச் செய்வது?

200 கிராம் கேழ்வரகை ஐந்து மணிநேரம் ஊறவைக்கவும். இதை தண்ணீர்விட்டு கொரகொரப்பாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் காய்ச்சவும். கொதித்த பிறகு கால் கிலோ வெல்லம் சேர்க்கவும். இதில் மூன்று பொடித்த ஏலக்காய், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு

கேழ்வரகு நுரையீரலில் சேரும் கெட்ட கொழுப்புகளைக் கரைக்க வல்லது. உடலின் இயல்பான செயல்பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரிசெய்வதிலும் பங்கு வகிக்கும் அமினோ அமிலம் இதில் நிறைந்திருக்கிறது.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 25 நவ 2021